இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் கூடவே செல்போனில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளம், OTT தளங்கள் மற்றும் இணையவழி விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

லோக்கல் சர்க்கில்ஸ் என்ற சமூக வலைத்தள நிறுவனம் நாட்டில் உள்ள 296 மாவட்டங்களில் சுமார் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் கணக்கெடுப்பு நடத்தினர். அதில் 61% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அவற்றை அதிகம் பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.