ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவருடைய  சொத்து மதிப்பு ரூ.12.53 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அசையும் சொத்து ரூ.6.38 கோடி, ரூ.49.95 லட்சம் மதிப்பில் 1.3 கிலோ தங்கம், 88 கிலோ வெள்ளி, ரொக்கமாக ரூ.90 ஆயிரம் உள்ளதாம்.

இத்தாலியில் உள்ள பரம்பரை வீட்டின் அவரின் பங்கீன் மதிப்பு ரூ.26.83 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார். வரும் மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அவர் போட்டியிடுகிறார்