கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கலின் போது பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசியல் லட்சிய திட்டமான கிரிலா லட்சுமி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டுக்கு 28 ஆயிரத்து 608 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக குடும்ப நிர்வாகத்துடன் வருமானம் ஈட்டும் பணிகளில் பெண்கள் ஈடுபட வாய்ப்புள்ளதாக முதல்வர் தெரிவித்தார். பெண்களின் நிதி சுதந்திரத்தை ஆதரிப்பதற்காக பெண் குடும்ப தலைவருக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்த பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு 75 ஆயிரத்து 938 ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். 200 கோடி செலவில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணிக்கொடை சலுகை வழங்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் கர்நாடகா பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தது.