தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக தனது அசைக்க முடியாத கோட்டையை மீண்டும் நிரூபித்து வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுத் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். அதேபோல், சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வினோத் மற்றும் வீரபாண்டி தொகுதியில் பாலாஜி சுகுமார் ஆகியோரும் தபால் வாக்குகளில் முன்னிலை வகித்து வருவதால், சேலம் மண்டலம் முழுவதும் ‘இரட்டை இலை’ ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆரம்பகட்ட நிலவரப்படி அதிமுகவின் முன்னணி தலைவர்கள் முன்னிலை பெற்று வருவது அக்கட்சியினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.