அமைச்சர்களின் அலுவலகங்களில் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவதில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தமிழக முதல்வர் விஜய் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அமைச்சர்களின் சொந்த அலுவலகங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர், வாகன ஓட்டுநர் மற்றும் போலீசார் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நியமனம் செய்யப்படவுள்ள நிலையில், இதில் உறவினர்களின் தலையீடோ அல்லது ஜாதி ஆதிக்கமோ இருந்தால் கடும் நடவடிக்கை பாயும் என முதல்வர் விஜய் கறாராகக் கூறியுள்ளார்.
இந்த நியமனங்கள் அனைத்தையும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்த முடிவு செய்துள்ள முதல்வர், உளவுத்துறை அளிக்கும் ரகசிய அறிக்கையின் அடிப்படையிலேயே பணியிடங்களை இறுதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்களின் நிழல் மனிதர்களைக் கண்காணிக்க உளவுத்துறைக்கு முதல்வர் விஜய் முழு பவர் கொடுத்துள்ளதால், தவெக அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் இந்த விவகாரம் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது!
