தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் முதலமைச்சர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளார். தவெக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பு தேர்தல் அறிக்கையிலும், பிரச்சார மேடைகளிலும் பெரிதாகப் பேசிய ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ இப்போது எங்கே போனது என்று அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் விளாசியுள்ளார்.

​தேர்தல் களம் முழுவதும் மேடைகளில் அனல் பறக்க வீர வசனங்களைப் பேசிய முதலமைச்சர் விஜய், இப்போது தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் கொடூரங்களும் நடக்கும் போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார், எதற்காகப் பதுங்குகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வரும் வேளையில் முதலமைச்சரின் இந்தத் தொடர் மௌனம் ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது