இந்தியாவில் பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினரை சேர்ந்த இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிக்க ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

இந்த கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த கடனுக்காக வங்கிகளை அணுகலாம் எனவும் கூடுதல் விவரங்களை அறிய https://www.standupmitra.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.