ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையேயான விவாகரத்து குறித்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜி.வி.பிரகாஷின் தாயார் ஏ.ஆர்.ரெய்ஹானா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“சைந்தவி திரும்பவும் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்” என்கிறார் ரெய்ஹானா. “சைந்தவியைப் போன்ற ஒரு நல்ல மருமகளை நான் இனிமேல் பார்க்க முடியாது. என் மகளுடன் கூட இவ்வளவு நெருக்கமாக பழகியதில்லை” என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்துக்கு ஜி.வி. சொல்லும் காரணங்களை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.