இன்னைக்கு நம்ம கையில காசு இருந்தா யாரு வேணும்னாலும் சைக்கிள் வாங்கி ஓட்டலாம், அதுக்கு எந்த ஒரு தடையும் இல்லை. ஆனா, ஒரு காலத்துல பைக் மற்றும் கார்களைப் போலவே சைக்கிள் ஓட்டுறதுக்கும் லைசென்ஸ் கட்டாயம் இருந்திருக்குன்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா? 1900-களின் தொடக்கத்தில் இந்தியாவிலேயே இந்த நடைமுறை இருந்திருக்கிறது. அதுவும் 1930-களில் நம்ம மெட்ராஸில் சைக்கிள் வச்சிருக்கவங்க அரசு அமைப்புகள் அல்லது பஞ்சாயத்துகளில் முறையாகப் பதிவு செஞ்சு லைசென்ஸ் வாங்கணுமாம்.

​இந்த லைசென்ஸ் வாங்குறதுக்கு வருஷத்துக்கு 2 ரூபாய் வரைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கு. அப்போதைய காலத்துல 2 ரூபாய்ங்கிறது பெரிய விஷயம்! சைக்கிளில் ஒரு சின்ன வில்லை (Plate) ஒட்டியிருப்பாங்க, அதுதான் அந்த சைக்கிளுக்கான அடையாளம். 1960-களுக்கு அப்புறம் பைக்குகளோட வரத்து அதிகமானதுனாலயும், நிர்வாக நடைமுறை சிக்கல்களாலயும் இந்த சைக்கிள் லைசென்ஸ் முறை மெல்ல மெல்ல முற்றிலுமாக கைவிடப்பட்டது.