இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதாவது நீங்கள் டெபாசிட் தொகையை ஒரு வருட காலத்திற்குள் கணக்கை முடித்து எடுக்க நேரிடும் பட்சத்தில் அந்த தொகைக்கு செலுத்திய வட்டி திரும்ப பெறப்பட்டை மீதி தொகை முழுவதுமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது புதிய விதிகளின்படி ஒரு வருடம் முதலீட்டு காலம் முடிவதற்கு முன்பாக கணக்கை மூடும் பட்சத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் ஒரு சதவீதம் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னர் ஒரு வருட முதல் 5 வருட டெபாசிட் திட்டத்தில் ஆறு மாதங்களுக்கு பின்னர் முன்கூட்டியே பணத்தை எடுக்கும்போது டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் முடிவதற்கு முன்பு அந்த கணக்கில் வட்டி செலுத்தப்படும். ஆனால் தற்போது இந்த திட்டத்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு முன்கூட்டியே பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் காலாவதியாகும் முன்பு அந்த கணக்கில் வட்டி வழங்கப்படும் எனவும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட கணக்கில் ஓய்வூதிய பலனை பெற்ற மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கணக்கு தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்வதற்கு முன்பு மத்திய அரசின் புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.