டெல்லியில் பிரீமியம் பேருந்துகளுக்கான திட்டத்தை அரசு அறிவித்துள்ள நிலையில் இதன் மூலம் டெல்லி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதியான மற்றும் நிலையான பயண விருப்பங்களை வழங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக பேருந்து நிலையங்களில் காத்திருக்காமல் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும்.

இந்த ஆண்டுக்கான டெல்லி மோட்டார் வாகனங்கள் லைசென்சிங் ஆப் அக்ரிகேட்டர் திட்டத்தின் கீழ் டெல்லி மக்களுக்கு வசதியான மற்றும் நிலையான பயண விருப்பங்களை வழங்கும் பேருந்து ஒருங்கிணைப்பாளர்களுக்கு அரசு உரிமைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இதன் மூலம் மக்களுக்கு பேருந்து பயணம் எளிமையாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.