
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் சிறப்பாக நடைபெற்றது. தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள், அரசியல் முன்னோடிகள் கொடி விளக்கம், மக்கள் எழுச்சி என எல்லாவற்றையும் விளக்கமாக எடுத்துரைத்தார். மாநாட்டில் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அவர் அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல முன்னணி நடிகரான பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் உங்கள் புதிய பயணத்திற்கு ஆல் தி பெஸ்ட் செல்லம் என்று பதிவிட்டுள்ளார். அதனை விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
All the best Chellam @actorvijay on your new journey.. pic.twitter.com/XUBS0AmYkM
— Prakash Raj (@prakashraaj) October 27, 2024