
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து வந்த பிரானேஷ் கோடை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் புறநகர் பகுதியில் அவருடைய தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த விசாரணையை தொடங்கினர்.
அந்த விசாரணையில் சிறுவன் ஆயுதத்தால் தாக்கப்பட்ட கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் சகோதரர் சிவகுமார் மீது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகிறது. அதாவது செல்போனில் ஆன்லைன் கேம்ஸ் விளையாடும் ஆர்வம் கொண்ட சிவகுமார் தனது தம்பி செல்போனை வாங்கி விளையாடியதுடன் திருப்பி கேட்கும் போது தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பான காட்சிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் சிவகுமாரை கைது செய்துள்ளனர்.