
உத்திரபிரதேசம் மாநிலம் பள்ளி பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செல்போனை சார்ஜ் செய்யும் போது மின்சாரம் தாக்கியதில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பூர் கிராமத்தில் மான்சி என்ற சிறுமி செல்போனை சார்ஜ் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியது.
சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சார்ஜ் போடும்போது 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.