மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் விலகியதாக தகவல் வெளியானது..  

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூசனுக்கு எதிரான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்நிலையில் டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்  வெளியேறியதாக முதலில் தகவல் வெளியானது.. ஆனால் அதில் உண்மையில்லை.. அதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சூழலில் போராட்டத்திலிருந்து வெளியேறிய சாக்ஷி மாலிக் மீண்டும் ரயில்வே பணியில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. எனவே பஜ்ரங் புனியா, சங்கீதா போகத், வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது..

இந்நிலையில்  போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது, தவறான தகவலை பரப்ப வேண்டாம் என சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். போராட்டத்துடன் பணிக்கு செல்வதும் எனது கடமை எனவும், சாக்ஷி மாலிக் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம் என ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.. முன்னதாக போராட்டத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்..

சாக்ஷி மாலிக் ட்விட்டர் பக்கத்தில், இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, நாமும் பின்வாங்க மாட்டோம். சத்தியாகிரகத்துடன், ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.