
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் தனது மனைவி ஆலியா பட் மற்றும் குழந்தையுடன் அடிக்கடி வெளியில் வரும்போது எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும். இருந்தாலும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என பத்திரிகையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களை ரன்பீர் கபூர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனால் அவரின் குழந்தை புகைப்படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ரன்பீருடன் செல்பி எடுக்க ரசிகர் ஒருவர் பலமுறை முயற்சி செய்துள்ளார். அவரின் செயலை பார்த்து கோபமான ரன்பீர் அவரது போனை வாங்கி தூக்கி எறிந்து விட்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவரின் செயலை பார்த்து பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
What just happened here!? 🤔#RanbirKapoor #Viral pic.twitter.com/oHjJdSINfP
— Trendulkar (@Trendulkar) January 27, 2023