கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி நட்சத்திர வீரர் ரோவ்மன் பவலை, ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து முற்றிலும் வேறொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்று தவறாக அடையாளம் கண்டுகொண்ட வேடிக்கையான சம்பவம் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது!

தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர் ஒருவர் ஏர்போர்ட்டில் பவலைப் பார்த்த குஷியில் ஓடிச்சென்று செல்ஃபி வீடியோ எடுக்கக் கோரியுள்ளார்;

“>

 

அதற்கு பவலும் கனிவோடு சம்மதித்து போஸ் கொடுத்துள்ளார். ஆனால், வீடியோ ரெக்கார்ட் ஆகிக் கொண்டிருக்கும்போதே, அந்த ரசிகர் பவலைப் பார்த்து “லுங்கி என்கிடி” என்று  கத்த, அதிர்ந்துபோன பவல் சட்டென முகத்தை மாற்றி, “இல்லைப்பா.. நான் ரோவ்மன் பவல்!” என்று அங்கேயே அந்த ரசிகருக்கு பல்டி கொடுத்து திருத்தியுள்ளார்.

“>

 

நிலைமை கைமீறிப் போனதை உணர்ந்து அந்த ரசிகர் நடுக்கத்துடன் வீடியோவை கட் செய்த நிலையில், “உங்களுக்கு எல்லாரும் ஒரே மாதிரிதான் தெரிவாங்களா?” என்று நெட்டிசன்கள் இப்போதே கமெண்ட் பாக்ஸ்களில் அந்த ரசிகரை வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர்!