
தமிழகம் முழுவதும் கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நான்கு முக்கு சாலையை கடப்பதற்காக நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உதவி ஆய்வாளரான ராஜன் என்பவர் மூதாட்டி சாலையை கடப்பதற்காக நின்றிருந்ததை பார்த்து பரபரப்பாக சென்ற வாகனங்களை நிறுத்தி மூதாட்டியின் கையைப் பிடித்து சாலையை கடக்க உதவி செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மூதாட்டிக்கு உதவி செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜனை பலரும் பாராட்டி வருகின்றனர்.