தங்க நகையை வாங்கும் போது செய்கூலி மற்றும் சேதாரம் என மிகப் பெரிய தொகையை மக்கள் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டடம் எதையும் செலுத்தாமலேயே நகையை அதிகம் வாங்கி பணத்தை மிச்சப்படுத்த முடியும். நகை கடைகளில் இதற்கான பிரத்தியேக திட்டங்கள் உள்ளன. இதில் 11 மாதங்கள் பணம் செலுத்தி 12வது மாதத்தில் செய்கூலி சேதாரம் இல்லாமல் ஜிஎஸ்டி மட்டும் கட்டிவிட்டு நகையை வாங்கும் திட்டமும் ஒன்று.
மாதம் 20 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் சேர விரும்புகிறீர்கள் என்றால் முதலில் மூன்று முதல் ஆறு மாதம் வரை மொத்தமாக பணம் கட்டலாம். ஆறு மாதம் என்றால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். அப்போது பணத்திற்கு ஏற்ப அன்றைய விலை அடிப்படையில் தங்கம் பதிவு செய்யப்படும். பிறகு ஏழு முதல் 11 மாதம் வரை பணத்தை செலுத்தி 12வது மாதம் செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் பிடித்த நகையை வாங்கலாம். இதனால் பணமும் மிச்சமாகும் நகையும் கூடுதலாக வாங்கலாம்
