தலைநகர் டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இப்படி இருக்கையில் கடந்த 25ஆம் தேதி நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகே வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு படையினர் 95 சதவீத தீக்காயங்களுடன் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார்.

அவர் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.