
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவை எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பலர் உயிரிழந்த பிறகும் கூட இன்னும் அரசாங்கம் திருந்தவில்லை.
போலீசுக்கே பணம் கொடுத்து கள்ளச்சாராயத்தை டாஸ்மாக் கடைகளில் வைத்து விற்பனை செய்கிறார்கள்.
இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட விவகாரத்தில் தற்போது அதிமுக கட்சியின் அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளர் ராஜா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.