நடிகர் தனுஷ் நடித்த ராயன் படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படம் திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் படத்தை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த படம் உலகம் முழுவதும் 17.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 10.2 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். இந்த நிலையில் முதல் நாளே அதிக வசூல் பெற்ற படம் என்ற பெருமையை ராயன் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பில்லா 2 படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.