
கோயம்புத்தூரில் உள்ள நீலாம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தாமாக கட்சியின் தலைவர் ஜிகே வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை உள்ளே வந்தபோது சீமான் அமர்ந்திருப்பதை பார்த்தார். உடனடியாக அருகே சென்று கைகுலுக்கியதோடு அவரைக் கட்டி அணைத்து சில வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். அரசியல் களத்தில் இருவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் சரமாரியாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது இருவரும் கட்டியணைத்து மகிழ்ச்சியாக பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.