வாரிசு இயக்குனரான வம்சி  இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த குடும்பத் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் , ஷியாம், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் நடிகர் விஜய்யின் 66 ஆவது படம். வாரிசு திரைப்படத்தை இசையமைப்பாளர் தமிழ் இசையமைத்திருந்தார்.

இந்த படம் கடந்த வருடம் வெளியாகி வசூலை குவித்திருந்தது. இந்த நிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் யோகி பாபு, சியாம், நடிகர் ராஸ்மிகா மந்தனா ஆகியோர் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பாடலாசிரியர் விவேக்  சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.