2021 ஆம் வருடம் வெளியான ரொமான்டிக் என்ற படத்தில் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தேவயானி ஷர்மா. தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார் .சமூக வலைதளம் மூலமாக பிரபலமான இவர் மாடலிங்காகவும் இருந்து வருகிறார். தற்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஹிந்தி, தெலுங்கு என படங்கள் நடித்தாலும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

சாதாரண நாயகியாக மட்டுமல்லாமல் தன்னுடைய நடிப்பதன் முழுவதுமாக வெளிப்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வளர வேண்டும். மேலும் தனது வாழ்க்கையில் லட்சியம் என்பது சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதுதான்.  இதற்காக முழு வீச்சில் இறங்கி அதற்கான வேலையை தொடங்கி இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.