
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது என்றும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
இது குறித்து பொது விநியோக அமைப்பு அளித்துள்ள விளக்கத்தில், இந்திய அரசாங்கம் செப்டம்பர் 30ம் தேதி ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக வெளியிட்டிருக்கும் கெடுதான். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன. அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.