
கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவத்தனைகள் செய்வது தற்போது முற்றிலும் மாறிவிட்டது. யுபிஐ ஆப்களில் உங்களது கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்து இணைத்துவிட்டால் போதும் டிஜிட்டல் முறையிலேயே பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடிகிறது. இதனால் கையில் கார்டுகள் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது கிடையாது.
இந்நிலையில் வழக்கமான கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கும் அளவுக்கு இணையான ரிவார்டு பாயிண்டுகளை ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கிகளுக்கு தேசிய கொடுப்பனவு கழகம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யூ பி ஐ மூலமாக பணம் செலுத்த முடியும். ஆனால் இதன் மூலமாக கிடைக்கக்கூடிய வெகுமதிகள் மற்ற கார்டுகளை விட மிகவும் குறைவானதாகும். தற்போது NPCI இன் உத்தரவின்படி இந்த புதிய விதிகள் வருகின்ற செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது