இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நகரங்களில் மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சமீபத்தில், சென்னை மெட்ரோ கட்டுமானத்திற்கு மத்திய அரசுதான் காசு கொடுக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது 118.9 கி.மீ சென்னையில் நடந்து வரும் மெட்ரோ பணிகளுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. மாநில அரசின் செலவிலும் சர்வதேச கடனை பயன்படுத்தியும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.