சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும் போன்ற அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டது.

மேலும் சென்னை மாநகராட்சி அரசுப் பள்ளிகளில் பயின்று JEE, NEET, CLAT, NIFT போன்ற பொதுப் போட்டித் தேர்வுகள் வாயிலாக கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவ-மாணவியரின் முதலாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.