சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் “சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும் போன்ற அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டது.

மேலும் 2023-24-ம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.