இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்இந்தியாவின் பெருமையாக முன்னிறுத்தப்படும் வந்தே பாரத் ரயிலை சென்னை-மதுரை இடையே இயக்குவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. தற்போது சென்னை – மைசூரு இடையே ஒரு ரயில் இயங்கி வருகிறது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை – கோவை இடையேயான ரயிலை பிரதமர் கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இதனையடுத்து மதுரை ரயில் நிலையத்தை வந்தே பாரத்காக தயார் செய்கிறது தெற்கு ரயில்வே.