சென்னையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட போராட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பெண்களுடைய பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாக போலீசாரின் ரோந்து பணி பறக்கும் ரயில்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் புறநகர் ரயில்களில் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில் உடனடியாக காவல்துறையினர் எண்ணிக்கை அதிகரிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணத்தால் குறுகிய தூரத்திற்கு இயக்கப்படும் புறநகர் ரயில்வே பெண்களுக்கான பெட்டியை நடுப்பகுதியில் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி வைக்கும் பட்சத்தில் ரயில்வே காவல்துறை பாதுகாப்பு பணிக்கு வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.