தமிழகத்தில் நீண்ட தூரங்களில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் பகல் நேரத்தில் சென்னை நகரத்தில் வர புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பெருங்களத்தூர் மற்றும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு நிலையத்தை பேருந்துகள் அடைந்தன. இந்நிலையில் போக்குவரத்து துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நீண்ட தூரம் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகருக்குள் வசிக்கும் பயணிகள் பயனடைவதுடன் போக்குவரத்துக் கழகத்திற்கும் இதன் மூலம் வருவாய் அதிகரிக்க கூடும். மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயில் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடைய வேண்டும். காலை 6 மணி முதல் மாலையை 5 மணி வரை வெளியூரிலிருந்து சென்னை நகருக்கு 150 முதல் 200 வரை அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இனி இந்த பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக வந்து கிண்டி,அசோக் நகர் மற்றும் வடபழனியை அடைந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.