இந்தியாவிலேயே இளநிலை மருத்துவ படிப்பில் அதிக எம் பி பி எஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றது. நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை பொருத்தவரை அதிகபட்சமாக கர்நாடகாவில் 6,006 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 5,765 இடங்களும் தமிழகத்தில் 4,935 இடங்களும் உள்ளன. கடந்த 9 வருடங்களில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதமும் எம்பிபிஎஸ் இடங்கள் 95 சதவீதம் மற்றும் முதுநிலை மருத்துவ இடங்கள் 110 சதவீதம் உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.