மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே மதுரையிலும் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் வகையில் இ டெண்டர் விடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விளம்பரத்தை இன்று வெளியிட்டுள்ளது.120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது.