சென்னை உட்பட 13 முக்கிய நகரங்களில் ஆண்டுக்கு 16 சதவீதம் வரை வீட்டு வாடகை அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நொய்டா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அதிகபட்சமாக 25 முதல் 35 சதவீதம் வரை வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வாடகை வீடு தேடுபவர்கள் பத்தாயிரம் முதல் 30000 ரூபாய் வரை வாடகையில் அதிகம் வீடு தேடுவதாகவும் அதனால் இந்த வாடகையில் உள்ள வீடுகளுக்கான தேவை அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.