சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 21 இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு துவக்கங்கள் வழங்கப்படுகிறது.

டிசம்பர் மாதம் வரை துவக்கங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணம் டோக்கன்கள் மற்றும் பயன அட்டைகள் 40 மையங்களில் டிசம்பர் 21 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் அந்தந்த பணிமனைகளில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.