வங்க கடல் பகுதியில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக உருவெடுத்துள்ள நிலையில் தமிழகத்தை நோக்கி புயல் ஒன்பது கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் சென்னையில் திரைப்பட காட்சிகள் அனைத்தும் ரத்து செய்வது தொடர்பாக திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  இன்று அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.