தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இது சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது நாளை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற் பகுதியில் நிலவும் எனவும் பிறகு நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூராகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.