தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக கனமழையால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது மழை நீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் என்னும் ஓரிரு நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும். ஆனால் கனமழையை விட சென்னை மக்களுக்கு இனிமேல் தான் ஆபத்து காத்திருக்கிறது. அதாவது மழை நீரில் கழிவு நீரும் கலந்திருப்பதால் காய்ச்சல், இருமல் மற்றும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் குறிப்பாக குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.