திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக், தற்போதைய தவெக ஆட்சியைத் திரைமறைவில் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் காவல் துறை தரப்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேர டீலிங் பேசிய விவகாரத்தில் காவல் துறை அசோக் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவர் தற்போது போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

​தலைமறைவாக இருக்கும் அசோக்கைக் கைது செய்யக் காவல் துறை தீவிர ஆக்ஷனில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 20-ம் தேதி அசோக்கைத் தேடி அவரது சென்னை இல்லத்திற்குத் தனிப்படை போலீஸார் அதிரடியாகச் சென்று சோதனையிட்டனர். ஆனால் அவர் அங்கு இல்லாததால், அவரைப் பற்றிச் சுற்றியுள்ளவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். தவெக அரசை அசைத்துப் பார்க்க முயன்ற வழக்கில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் அசோக்கை போலீஸார் தொடர்ந்து வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.