பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்னும் ஒரிரு மாதங்களில் அவர் இங்கிலாந்து சென்று, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் 4 மாதங்கள் அரசியல் தொடர்பான படிப்பை படிக்க உள்ளார்.

இந்நிலையில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஏர்போர்ட்டில் செத்தாலும் பேசமாட்டேன் என்று கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் அவர் சென்று விட்டார். அமித்ஷாவின் திடீர் அழைப்பு காரணமாக அண்ணாமலை டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.