பிரபல தமிழ் நடிகர் ஜீவா ரவி, தமிழக வெற்றிக் கழகத்தில்  இன்று இணைந்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையனைச் சந்தித்து, அவர் முன்னிலையில் நடிகர் ஜீவா ரவி முறையாகத் தன்னைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜீவா ரவி, “தற்போது நான் உயிரோடு இருக்கக் காரணமே செங்கோட்டையன் அண்ணன்தான்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவருடைய இந்த உணர்ச்சிப்பூர்வமான கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

“>

நடிகர் ஜீவா ரவி, ‘மௌன குரு’, ‘சாட்டை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘நெருக்கடிக்கு நீதி’, ‘விடியல் முயற்சி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த இணைவு, தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் விஜய்யின் தலைமையில் திரையுலகப் பிரமுகர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.