கலைஞரின் எழுத்து சில நேரம் நமக்கு கண்ணீரை வரவைக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கலைஞரின் எழுத்து அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று. சில சமயம் கலைஞரின் எழுத்தில் கோபம் இருக்கும். அது எதிராளியை சுட்டுவிடும். அவரின் பேச்சில் தெனாலிராமனுடைய நகைச்சுவை இருக்கும். அரசியலைப் பொறுத்தவரையில் சாணக்கியனின் தந்திரமும், பாரதியின் கோபமும் இருக்கும். கலைஞர் பல நேரங்களில் தன்னிடம் பெருந்தன்மையாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் நேரத்தில் நான் இரட்டை இலைக்கு வாக்களித்தேன் என்று மீடியாவிடம் சொல்லிவிட்டேன். அதன்பிறகு நிகழ்ச்சி ஒன்றில் கலைஞரை சந்திப்பதை தவிர்க்க, காய்ச்சல் என்று பொய் சொன்னேன். பிறகு அவரை நேரில் சந்தித்தபோது, ‘சூரியன் பக்கத்தில் அமருங்கள் காய்ச்சல் போய்விடும்’ என கலைஞர் கூறியதாக அவர் தெரிவித்தார்.