
நாளை இந்த ஆண்டுக்கான முதல் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது. அதாவது பௌர்ணமியை முன்னிட்டு முழு நிலவு தெரியும் நிலையில், நிலவின் சுற்றுவட்ட பாதை மிகக் குறைவாக இருந்து முழு பௌர்ணமி நிலவாக காட்சியளிப்பது தான் ப்ளூ மூன் என்று அழைக்கிறார்கள். இதற்கு நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று அர்த்தம் கிடையாது.
இருப்பினும் சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக நிலவின் நிறம் நீல நிறத்தில் காட்சி அளிக்கலாம். இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ப்ளூ மூன் தோன்றிய நிலையில் தற்போது தான் தோன்ற இருக்கிறது. இதனை வெறும் கண்களாலே பார்த்துக் கொள்ளலாம். மேலும் இதனை நாளை இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை இந்தியாவில் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.