
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிரியங்கா மற்றும் மகாபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். மனோ, சித்ரா இவர்களோடு டி. இமானும் நடுவராக கலக்கி வருகிறார். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பலருடைய வாழ்க்கையும் மாறி உள்ளது என்று சொல்லலாம்.அந்தவகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் வாழ்க்கையை தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றி அமைத்துள்ள விஷயம் அனைவரையுமே நெகிழ வைத்துள்ளது.
அதாவது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் நஸ்ரின்அம்மாவிற்கு டைலரிங் கடை வைக்க வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. இதை அறிந்த ராகவா லாரன்ஸ் அவருடைய அம்மாவிற்கு சொந்தமாக கடை வைத்து கொடுத்துள்ளார். அந்த கடைக்கு நஸ்ரின் தையல் கடை என்று பெயர் வைத்துள்ளார்கள். பலருக்கும் நன்மைகளை செய்துவரும் ராகவா லாரன்ஸ் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.