ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளா ரேஷன் கடைகளில் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹில்லி அக்வா 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் வெளி கடைகளில், ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் ரேஷன் கடைகளில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கார்டு இல்லாதவர்களும் இதை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சபரிமலை செல்லும் பக்தர்களுடைய வசதிக்காக இது கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.