இந்திய கிரிக்கெட்டில் அடுத்த விராட் கோலி  இவர்தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிபி தலைவருமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்..

இந்தியாவின் விராட் கோலி சமகால கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் உள்ள நிலைத்தன்மையே இதற்குக் காரணம். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் அடுத்த விராட் கோலி யார்? இந்த கேள்விக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிபி தலைவருமான ரமீஸ் ராஜா பதில் அளித்துள்ளார். ஐபிஎல் 2023 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பிரகாசிக்கும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பெயரை ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

23 வயதான அவர் ஏற்கனவே 4 போட்டிகளில் 183 ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குஜராத் அணிக்கு எதிரான கடைசி வெற்றியில் கில்லின் அரைசதம் முக்கியமானது. பஞ்சாப் அணிக்கு எதிராக 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் கில் என்று ரமீஸ் ராஜா புகழாரம் சூட்டினார். மேலும், அவர் கில்லை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் ஒப்பிடுகிறார்.

இதுகுறித்து ரமீஸ் ராஜா கூறியதாவது, ‘சுப்மன் கில் ஒருஜீனியஸ். அவருக்கு முன்னால் ஒரு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை உள்ளது. பேட்டிங்கை பார்க்கும்போது அவர் இயல்பாக விளையாடும் வீரர் என்பது புரியும். டிரைவ் ஷாட்களை விளையாடும்போது ஷாட்டில் உள்ள வளைவைக் காணலாம்.. ரன்கள் ஆஃப்சைட் அல்லது ஆன்சைடு, ஹூக் அல்லது புல் மூலம் அடிக்கப்பட்டதா என்பது முக்கியமில்லை. பந்தை அழகாகவும் க்ளீனாகவும் அடிப்பார். விராட் கோலிக்குப் பிறகு கில் சிறந்த பேட்ஸ்மேன் என்று பலர் பார்க்கிறார்கள்.

கில் ரோஹித் சர்மாவைப் போல நல்ல டச், கிளாஸ் மற்றும் நேர்த்தியுடன் இருக்கிறார். கில் நிலைத்தன்மையுடன் விளையாடுகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில், பந்துவீச்சாளர்களிடையே  கில் ஆதிக்கம் செலுத்துகிறார். இளம் வயதிலேயே சாதனை படைத்தவர். கில்லுக்கு வானமே எல்லை என்று ரமீஸ் ராஜா தனது யூடியூப் வீடியோவில் கூறியுள்ளார்.