சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய பகுதி ஒன்றை சொந்தம் கொண்டாடுவதில் சூடான் மற்றும் தெற்கு சூடானுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் அபேயை பகுதிக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஐநா அமைதி காப்பாளர் உட்பட 32 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.