கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு அக்டோபர் 31ம் தேதி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். ஓணம், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது சுற்றுலாப் பயணிகள் இந்த அணையை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். என் நிலையில் ஓணம் மற்றும் தசரா பண்டிகைகள் நெருங்குவதால் இடுக்கி அணையை காண்பதற்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணமாக தலா ₹40யும் சிறுவர்களுக்கு 20 ரூபாயும் செலுத்தி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலைப்பேசி மற்றும் கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வாராந்திர பராமரிப்பு பணிகளுக்காக புதன்கிழமை தோறும் பயணிகளுக்கான அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது